Tuesday 24 July 2012

Peruvaazhvu Kaanbadhu eppodhu



பெருவாழ்வு காண்பது எப்போது?
                                             - சாரதா ராஜாமணி 

குடிசையோரம் புழுக்கள் ஓடும் சாக்கடை ஓடுது - தெருவில்
குழாய்த் தண்ணி அதனருகே சொகுசாய் கொட்டுது
கிழிஞ்ச சட்டைப் பையனங்கே எச்சில் துப்புறான்
கிழவியவள் தானுமங்கே குடிநீர் பிடிக்கிறாள்!

எருமைமாடு சாணம் போட சகதி நிறையுது - தெருவில்
சிறுவனவன் மலம் கழிக்க நோயும் பரவுது!
கண்ட இடத்தில் கொட்டுவதால் குப்பை நிறையுது
உண்ட இடத்தில் படுத்தபடி தெருநாய் உறங்குது!

பள்ளி செல்லா சிறுவனவன் கோலி ஆடுறான் - அங்கே
படிப்பு அறியாச் சிறுமி அவள் சுள்ளி பொறுக்குறாள்!
வாழ தெரியாத் தலைவனவன் குடியில் ஆடுறான்
வாழக்கைப்பட்ட குடிசைப்பொண்ணு அவனை சாடுறாள்!

கோலி ஆடும் சிறுவனவன் படிப்பதெப்போது?
ஜாலியாக திரியும் தலைவன் திருந்துவதெப்போது?
குடிசைவீடும் மாளிகையாய் மாறுவதெப்போது?
குடிமக்களும் பெருவாழ்வு காண்பதெப்போது?

No comments:

Post a Comment